• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் ஆவணிமாதபிறப்பை முன்னிட்டு அஸ்ரத் தேவருக்கு சிறப்பு பூஜை

ByA.Tamilselvan

Aug 17, 2022

திருப்பரங்குன்றத்தில் ஆவணி மாதப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதேபோல் மாதப்பிறப்பு, கார்த்திகை, விடுமுறை நாட்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை அதிக அளவு இருக்கும். ஆவணி மாத பிறப்பு மற்றும் செவ்வாய்க்கிழமை என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு அஸ்ரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது .அப்போது பக்தர்களுக்கு அஸ்ரத் தேவர் அருள் பாலித்தார்.. ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.