• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

ரம்ஜானை முன்னிட்டு திண்டுக்கல் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை..,

ByS.Ariyanayagam

Mar 21, 2026

திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதிகாலையில் திரளான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, பள்ளிவாசல் மைதானத்தில் கூடியிருந்து, உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

பின்னர் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
இதேபோல நாகல் நகர் ,சந்து கடை, செல்லாண்டி அம்மன் கோயில், ரவுண்ட் ரோடு, வேல்வார்கோட்டை,ராஜக்காபட்டி உட்பட பல இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்திய ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.