• Tue. Nov 17th, 2026

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 9-வது புத்தகத் திருவிழா..,

ByS. SRIDHAR

Nov 17, 2026

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 9-வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2026 29.11.2026 முதல் 08.12.2026 வரை 10 நாட்கள் புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெற உள்ளதை முன்னிட்டு புத்தகத் திருவிழா விழா பதாகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா,இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.11.2026) வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் திருஹெச்.எம்.குழந்தைசாமி அவர்கள் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.இ.அபிநயா அவர்கள், மாவட்ட நூலக அலுவலர் திரு.முத்து அவர்கள், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர்.ஜீவி, கவிஞர்.ரமா.ராமநாதன் அவர்கள், கவிஞர்.வெள்ளைச்சாமி அவர்கள், திரு.முத்துக்குமார் அவர்கள், திரு.பிச்சை முத்து அவர்கள், திருமதி.ஷோபா அவர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட நிர்வாகிகள்; மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.