புதுக்கோட்டை மாநகராட்சியில் 8 வார்டுகளில் அமிர்த திட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் குடிநீர் திட்டம் மாநகராட்சி சார்பில் எட்டு வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் பணிகள் தொய்வாக நடைபெறுவதாகவும் ஒன்றரை மாத காலமாக பணிகள் நடைபெறும் பகுதிகளில் குடிநீர் வராததால் பொதுமக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்பதால் அதிருப்தி அடைந்த திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி வாயில் முன்பாக பாய் விரித்து தலையணை வைத்து உறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

புதுக்கோட்டை நகராட்சியாக இருந்தது தமிழக அரசு மாநகராட்சியாக தரம் உயர்த்தி ஏற்கனவே 42 வார்டுகளில் கூடுதலாக ஊராட்சி பகுதியைச் சேர்ந்த 11 ஊராட்சிகள் இதில் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது

இந்த நிலையில் மாநகராட்சி பகுதியில் உள்ள ஏழு வார்டுகளில் மத்திய அரசின் அமிர்த திட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோன்று மாநகராட்சி சார்பில் எட்டு வார்டுகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடங்கி ஆறு மாதங்களுக்கு மேலாகியும் பணிகள் முடிவடையவில்லை. பணிகள் மிகவும் குறைவாக நடைபெறுகிறது இதனால் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கழிவு நீர் செல்ல முடியாமல் சாலைகளில் சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே பணிகளை விரைந்து முடித்து குடிநீர் விநியோகம் செய்து தர வேண்டும் மற்றும் கழிவு நீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயருக்கு புகார் அளித்தும் அவர்களும் இந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பொதுமக்கள் அந்தந்த பகுதி கவுன்சிலர்களை சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த பணிகள் நடைபெறும் வார்டுகளில் உள்ள திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இன்று காலை மாநகராட்சி அலுவலக வாயில் முன்பாக பாய் விரித்து தலையணை வைத்து உறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரிகள் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் பணிகள் முடிவடைந்தால்தான் நாங்கள் இந்த இடத்தை விட்டு நகர்வோம் என்று கூறி போராட்டத்தை கவுன்சிலர்கள் தொடர்ந்து செய்து வருவதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது காவல்துறையும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.