விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள வெம்பக்கோட்டையில் மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் வள்ளி, தெய்வானை, சமேத முருகன் தனி சன்னதி உள்ளது. இங்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் முதல் நிகழ்ச்சியாக பால், பன்னீர், இளநீர்,ஜவ்வாது. தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திவ்ய பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து முருகனுக்கு திருமண கோலத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. முருகனுக்கும் தெய்வானைக்கும் மாலை மாற்றி நடைபெற்ற பல்வேறு சடங்கு வைபவங்களை பக்தர்கள் ஏராளமானோர் கண்டு களித்தனர்.பல்வேறு மந்திரங்கள் ஓதி மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்த பின்னர் முருகன் மற்றும் தெய்வானைக்கு சிறப்பு தீப ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் அரோகரா கோஷமிட்டு முருகனை வணங்கினர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
