


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலை செண்பகத் தோப்பு பகுதியில் உள்ள காட்டழகர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
ஸ்ரீ சுந்தரவல்லி, சௌந்தரவல்லி சமேத, ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் என்ற ஸ்ரீ காட்டழகர் பெருமாள் (ஸ்ரீவிசுவாசு வருட பிறப்பு) தமிழ் வருடப்பிறப்பு முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.


விருதுநகர் மாவட்டம் சிவகாசி, விருதுநகர், கோவில்பட்டி, தாயில் பட்டி, சாத்தூர் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஐந்து கிலோ மீட்டர் மலை ஏறி காட்டழகரை தரிசித்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

