



சாத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தில் திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திரைப்பட நடிகரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மேலும் பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி..,

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போடப்பட்டிருந்த சட்ட மசோதா மற்றும் பல்கலைக்கழகங்களில் துணையை வேந்தர்களை நியமிக்காமல் உயர்கல்வியை முடக்கி வைத்து இருந்த ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தி மாநில அரசுகளின் உரிமைகளை மீட்டெடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றார்.
மேலும் வருகிற மே ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 17 பல்கலைக் கழகங்களிலும் வேந்தராக இருந்து, துணை வேந்தர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமிப்பார் என்றார்.
மேலும் பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி..,
அதிமுக, பாஜக கூட்டணி குறித்து விமர்சனம் செய்த திண்டுக்கல் ஐ. லியோனி கூட்டணிக்கு தலைமை தாங்குபவர்கள் தான் கூட்டணி குறித்து அறிவிக்க வேண்டும் எனவும், ஆனால் கூட்டணி குறித்து, அமித்ஷா அறிவிக்கும் போது, எடப்பாடி பழனிச்சாமி மௌனமாக இருந்தார் என விமர்சனம் செய்தார்.
மேலும் அதிமுக, பாஜக கூட்டணியை பார்த்து, திமுக பயந்து விட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய கருத்துக்கு, பதில் அளித்த ஐ.லியோனி..,
இது போன்ற ஆயிரம் சலசலப்புகளை பார்த்த இயக்கம் திமுக எனவும், 2026 சட்டமன்றத் தேர்தல் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றார்..
மேலும் பேசிய திண்டுக்கல் ஐ லியோனி..,
திமுகவை விமர்சித்து பேசியவர்கள் எல்லாம் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போல் சிதறடிக்கப்பட்டார்களே ஒழிய, திமுக மீது மோதி ஜெயித்தவர்கள் யாரும் இல்லை என்றார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு அதிமுக ஆட்சியில் வைத்த 6 கோடி ரூபாய் தவணையை திமுக ஆட்சியில் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றார்.
மேலும் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை எந்த விதத்திலும் யாராலும் சிதைக்க முடியாது என்றார்.

