புதுக்கோட்டை ரயில் நிலையத்தை இன்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை. வைகோ ஆய்வு செய்து இருக்கிறார். அப்போது ரயில் நிலையத்தின் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாகவும் அது குறித்து ஆய்வு செய்ய வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரயில் நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டமும் நடத்தி இருக்கிறார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ பணிகள் மிகவும் மெதுவாக நடைபெறுவதாக வந்த தகவல் அடிப்படையில் தான் ரயில் நிலையத்தை ஆய்வு செய்து. இந்த ரயில் நிலையம் மதுரை உட்கோட்டத்தில் வருவதால் அங்குள்ள உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது இங்கு நடைபெறும் புனரமைப்புப் பணிகள் ஆனது அம்ருத் பாரத் என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வருகிறார்கள். இது இங்கு மட்டும் அல்ல இந்தியா முழுவதும் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்று சொல்லி இருக்கிறார். அதனால் விரைவில் அங்குள்ள கழிவறை, குடிநீர், உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் தீர்க்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். மேலும் ரயில் நிலையத்தில் பறந்து கொண்டிருந்த தேசியக்கொடி ஏற்றாமல் இருக்கிறது என்பதை ஏற்கனவே இரண்டு முறை நினைவுபடுத்தி என்றும் அதை நினைவுபடுத்தி விட்டு வந்திருக்கிறேன்.
புதுக்கோட்டையில் 2 ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. அந்த வகையில் கருவேப்பிலான் கேட் ரயில் மேம்பாலத்தை பொறுத்தமட்டிலும் திருச்சி காரைக்குடி நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட இருப்பதால் அதற்குரிய நிலமெடுப்பு பாலத்திற்கான நிலமெடுப்பு என அனைத்து பணிகளும் முடிந்த பிறகு தான் பாலம் குறித்த பணிகளும் மேற்கொள்ளப்படும்.
அதேபோல் திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் பாலம் அமைப்பதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் அங்கு குடியிருந்த மக்கள் அவர்கள் கட்டிருந்த வீடுகள் போன்றவற்றிற்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் ஏற்படுவதாக ஏற்பட்ட பிரச்சனையில் அது இன்னும் தீர்வு எட்டப்படாமல் இருக்கிறது. இந்த இரண்டு பாலங்களுக்குமான நிலங்கள் குறித்த பிரச்சினை முடிந்த பிறகு மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை ரயில்வே துறை போன்ற அனைத்து துறைகளையும் வைத்து முடிவு செய்து தான் பாலத்தின் பணிகள் தொடங்கப்படும். அதுவும் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிந்துவிடும்.
தற்போது புதிதாக அமைந்திருக்கும் அரசு திறம்பட செயல்பட வேண்டும் என்றால் ஓர் ஆறு மாத காலமாவது அவகாசம் கொடுக்க வேண்டும்.

புதிய அரசு அமைந்த உடன் ஆங்காங்கே நடைபெறும் குற்ற செயல்கள் குறித்து பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. 100% குற்றங்களும் நடைபெறாது என்று உறுதியாக சொல்ல முடியாது அது எந்த ஆட்சியாக இருந்தாலும். அதே நேரத்தில் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்களா என்பதை தான் பார்க்க வேண்டும். அந்த வகையில் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
வளர்ந்த நாடுகளிலேயே குற்ற செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நம் நாடு வளரும் நாடு. குற்றச் செயல்கள் இருக்கத்தான் செய்யும்.
அந்த வகையில் வட மாநிலங்களில் இருப்பதை விட தமிழ்நாடு குற்ற செயல் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கின்றது. அதை சரி என்று நான் சொல்லவில்லை. ஆனால் நடவடிக்கை என்று பார்க்கும்போது சென்ற ஆட்சியாக இருக்கட்டும் இந்த ஆட்சியாக இருக்கட்டும் நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் வருகிறார்கள்.
மாவட்ட ஆட்சியர்கள் இப்போதுதான் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். அதற்கான செய்திகள் இன்று வந்திருக்கின்றன.
சிங்கப்பெண் போலீஸ் படை உருவாக்குவதில் என்ன சிக்கல் என்று எனக்குத் தெரியவில்லை. கொஞ்சம் தாமதமாகிக் கொண்டுதான் வருகிறது.
குற்றச் சம்பவங்களை இல்லாத நாடு என்பது சினிமாவில் மட்டும்தான் பார்க்க முடியும் நடைமுறையில் பார்க்க முடியாது.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களிடம் வாக்குறுதி கொடுக்கும் போது எல்லா கட்சிகாரர்களும் சொல்வதுதான். ஆனால் நடைமுறை சாத்தியம் என்பது சில மாதங்கள் ஆகும். புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்து ஒரு மாதம் கூட ஆகவில்லை.
திமுக கூட்டணியில் இருந்து பொதுவுடமைத் தோழர்கள், காங்கிரஸ் கட்சி நண்பர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியாக இருக்கட்டும் அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் ஏற்கனவே அறிக்கையாகக் கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் நினைவு படுத்த கடமைப்பட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் எந்த கட்சியும் பெரும்பான்மையாக ஆட்சி அமைக்க முடியாது என்ற ஒரு சூழ்நிலையில் தான் உடனடியாக வேறொரு தேர்தலையும் சந்தித்தால் பொருளாதார நஷ்டம் அடையும் என்பதோடு ஜனாதிபதி ஆட்சிக்கு வழி வகுத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தார்மீக அடிப்படையில் ஆதரவு கொடுக்கப் பட்டிருக்கிறது. இதே நடைமுறை கடந்த காலங்களில் அரசமைத்த போதும் கடைபிடிக்கப்பட்டு இருக்கிறது.
தேர்தல் பரப்புரையின் போது எந்த கட்சியும் எந்த உத்தரவாதமும் கொடுத்திருக்க முடியும். அப்படித்தான் கொடுத்திருப்பார்கள். ஆனால் இப்போது தமிழக வெற்றி கழகத்திற்கு திமுக கூட்டணியில் இருந்து ஆதரவு என்றால் ஒரே காரணம் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தான்.
முதலமைச்சர் விஜய் அவர்கள் வெற்றி பெற்றவுடன் அனைத்து கட்சியின் தலைவர்களையும் அவர்களது இல்லத்திற்கே சென்று சந்தித்து வாழ்த்து பெற்றது புதிய ஒரு நல்ல அணுகுமுறையாக இருக்கிறது. பத்திரிகையாளர்களை சந்திக்க மறுக்கிறார் என்றால் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது தான் தங்களது நிலைப்பாட்டை பிரச்சனைகளை மக்களிடம் ஊடகங்கள் மூலமாக கொண்டு போய் சேர்க்க முடியும்.
இப்போது உள்ள ஆட்சியில் குதிரை பேரும் நடந்துள்ளது என்றால் ஏற்கனவே நடந்த ஆட்சிகளில் நடந்ததெல்லாம் குதிரை பேரமா கழுதை பேரமா? நான் எல்லா கட்சிகளைப் பற்றியும் தான் சொல்கிறேன். மேகதாது அணை கட்டுவதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காமல் கர்நாடகா அரசு வங்கிக்கிறது. அது கண்டிக்கத்தக்கது.

இப்போது நடைபெற்ற தேர்தலில் ஜாதி மதம், பணம் அனைத்தையும் கடந்து விஜய் வெற்றி பெற்றிருக்கிறார். இது எந்த கட்சியாலும் செய்ய முடியாத சாதனையை அவர் செய்திருக்கிறார். இந்த அரசை இன்னொரு திராவிடக் கட்சியின் அரசாகத்தான் நாங்கள் பார்க்கிறோம் என்று பேசினார். அவருடன் மதிமுக மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, வழக்கறிஞர் சிற்றரசு ஆகியோர் இருந்தனர்.



