• Sat. Apr 20th, 2024

திருவண்ணாமலை மகா தீப விழாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

ByA.Tamilselvan

Nov 5, 2022

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக டிசம்பர் 6-ந்தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.இவ்விழாவுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
பக்தர்கள் அதிக அளவில் வந்து சொல்வார்கள் என்பதால் கூட்ட நெரிசல் அதிகரிக்கும். அதனால் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தெரிவித்துள்ளார் அதே போல. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2,692 சிறப்பு பஸ்கள் மூலம் 6,500 நடைகள் இயக்கப்பட உள்ளன. மகா தீபத்தன்று பரணி தீபம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருதல் நிகழ்வை விஐபிக்கள் தரிசிப்பதற்கு தேவையான நடவடிக்கை மற்றும் அவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *