• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சிறப்பு பேரவை தொடர்-மாலை 6 மணிக்கு அறிவிப்பு

சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பற்றி இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படுகிறது.
நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக தவிர மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்நிலையில், நீட் விலக்கு தொடர்பான சிறப்பு கூட்டத்தொடர் தேதி குறித்து சபாநாயகர் அப்பாவு இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கிறார்.