மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரனகோட்டை பொன்மலை அடிவாரத்தில் அன்பே கடவுள் மாற்று திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் மதுரை பாரத ஸ்டேட் பேங்க் பணியா ளர் நண்பர்களுக்கு குழு சார்பாக தீபாவளி புத்தாடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு பாரத ஸ்டேட் பாங்க் உதவி பொது மேலாளர்கள் (பணி ஓய்வு) மீனாட்சிசுந்தரம் கணபதிராமன் தலைமை தாங்கினர். விஸ்வ நாத ன், இராமமூர்த்தி, வசந்தி,பிரதீபா, ராம்குமார்,மகேஸ்வரி, விஜயலட்சுமி பஞ்சலட்சுமி, சத்யபாமா, நிர்மலா சரோஜாஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இல்ல செயலாளர் ஆசை தம்பி வரவேற்றார்.இந்த விழாவில் பார்வையற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் மாணவ மாணவிகளுக்கு வேஷ்டி சேலை போர்வை உள்ளிட்ட புத்தாடைகள், அரிசி,பலசரக்கு பொருட்கள் காய்கறிகள் பழங்கள்,இனிப்பு வகைகள் பட்டாசுகள் ஆகியவை வழங்கப்பட்டது. முடிவில் இல்ல காப்பாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.