• Sun. Nov 1st, 2026

சாத்தூரில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம்..,

ByK Kaliraj

Nov 1, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் விஜயதசமியை முன்னிட்டு ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கம் சாத்தூர் கிளை சார்பில் பதசஞ்சலம் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது

இந்த அணி வகுப்பு பெருமாள் கோவில் தேரடி வீதியில் தொடங்கி மெயின் ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, தென்வடல் புதுத்தெரு, காமராஜபுரம், மதுரை பைபாஸ்ரோடு, வழியாக சாத்தூரில் பல்வேறு தெருக்களை சுற்றி வந்து மீண்டும் மெயின் ரோட்டிற்கு வந்து மதுரை பேருந்து நிறுத்தம் சாத்தூர் பேருந்து நிலையம் வழியாக வந்து வடக்கு ராதை வீதியில் இந்த ஊர்வலம் முடிவடைந்தது

ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சீருடைய அணிந்து பேண்ட் வாத்தியங்கள் முழங்க அணிவகுத்து சென்றனர். வடக்கு ரத வீதியில் அணிவகுப்பு முடிவடைந்த உடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நிர்வாகிகள் சந்திப்போம் நடைபெற்றது.

இந்த அணி வகுப்பு ஊர்வலத்திற்கு சாத்தூர் டிஎஸ்பி குருசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.