• Fri. Oct 30th, 2026

முதலமைச்சரின் வருகைக்காக பொதுமக்கள் கட்சியினர் ஆர்வத்துடன் உள்ளனர்- அமைச்சர் பர்வேஸ் பேட்டி..,

ByS. SRIDHAR

Oct 30, 2026

வரும் திங்கட்கிழமை இரண்டாம் தேதி தமிழக முதலமைச்சர் புதுக்கோட்டை மாணவர்கள் வருகை தர இருக்கிறார். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பர்வேஸ் தமிழக வெற்றிக்கழக அரசு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் இதே போன்ற சிறப்பான திட்டம் புதுக்கோட்டையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் எதிர்பார்க்கலாம் எனவும் திட்டத்தை வழங்க தமிழகம் முதலமைச்சர் தயாராக இருப்பதாகவும்,

புதுக்கோட்டை மாநகரில் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நடைபெற இருப்பதாகவும் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் நிகழ்வில் 100 கோடி ரூபாய்க்கு மேல் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் வழங்க இருப்பதாக தெரிவித்தார்.

அமைச்சர் பர்வேஸ் மேலும் தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதன் முறையாக வரும் தமிழக முதலமைச்சரின் வருகையை கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்தார் அமைச்சர் பர்வேஸ் விராலிமலையில் ரோடு ஷோ நடைபெறுவது சம்பந்தமாக பரிசிலனை மட்டுமே இருப்பதாகவும் தற்போது வரை இறுதி முடிவு எடுக்கவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.