• Tue. Feb 18th, 2025

ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால். . குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்ககோரி தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அனுப்பி வைத்தது. ஐந்து மாதம் கிடப்பில் போட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆளுநர் அந்த மசோதாவை திருப்பி அனுப்பி வைத்து விட்டார்.

இது குறித்து ஆளுநர் மீதுள்ள அதிருப்தியில் அனைத்து கட்சியினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.இந்நிலையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாஜக ,அதிமுக பங்கேற்க வில்லை. மீண்டும் சட்டமசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்படும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

தற்போது எழுந்துள்ள பிரச்னை பிரதான எதிர்கட்சியான அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பது தான். முதல் முறையாக நீட் விலக்கு சட்டமசோதா சட்டமன்றத்தில் கொண்டு வந்த போது பாஜக தவிர்த்து மற்ற அனைத்து கட்சியினரும் ஒரு மனதாக ஆதரவு தெரிவித்து தான் நிறைவேற்றப்பட்டது.அதில் அதிமுகவும உள்ளடக்கியது தான்.
இந்நிலையில் ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியதும் அதிமுகவினர் இந்த விஷயத்தில் திமுக சரியாக கையாளவில்லை என்று குற்றம்சாட்டினர். இது போல அதிமுக விருதுநகர் ஒன்றிய செயலாளர் மச்ச ராஜா அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கு எடப்பாடியார் அரசு கொண்டுவந்த 7.5 சதவீதத்தை 15% ஆக உயர்த்துங்க.மேல்நிலை (+1,+2) கல்விக்கான பாடத்திட்டத்தை நீட் தேர்வில் வெற்றி பெறும் விதமாக மாற்றுங்க.அங்கன் வாடி பள்ளிகளை நவீனப்படுத்தி நல்ல ஆசிரியர்களை பணியமற்றி Pri KG, LKG, UKG என கல்விச்சான்றிதழ் பெற வழி செய்ங்க. எதற்காக கவர்னர் தேவை இல்லை என்று சொல்றீங்க. நீங்கள் டீ குடிக்கும் போது, அதிமுக அரசு பற்றி குறை கூற சென்ற போது ஆளுநர் தேவையா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அதிமுகவினர் இப்படி நீட் தேர்வுக்கு ஆதரவாக பதிவு செய்து வரும் நிலையில் இன்றைய அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காத அதிமுக , நீட் விலக்கிற்காக தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு அளிக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவித்து இருந்தால் இது பிரச்சனையாக உருவாகி இருக்காது.
பாஜக – அதிமுக கூட்டணி நகர்ப்புறத்தேர்தலில் முறிந்த போதிலும் டெல்லியிலிருந்து வந்த உத்தரவின் பேரில் அதிமுக இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிமுகவினர் ஒரு கருத்து பேச , அதிமுக தலைமை ஒரு கருத்து பேசுவது என ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் என குழப்பி வருவதால் அதிமுகவினர் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.