• Sun. Nov 1st, 2026

தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருதினை ஆசிரியர் சந்திரனுக்கு வழங்கிய அமைச்சர் ராஜ்மோகன்..,

தமிழ் நாடு அரசின் 2025 ஆம்ஆண்டிற் கான தமிழ்ச்செம்மல் விருது மதுரை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி முதுகலைத்தமிழாசிரியர் முனைவர் ஞா. சந்திரனுக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதினை பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுன் ஆகியோர் இருந்தனர். இந்த விருதினை பெற்ற ஆசிரியர் சந்திரன் இதுவரை 12க்கும் மேற்பட்ட இலக்கியம் சார்ந்த விருதுகளை பெற்றிருக்கிறார்.

டாக்டர் அப்துல் கலாம் மற்றும்தமிழக அரசின் தலைமைச் செயலராக பணியாற்றிய இறையன்பு ஆகியோர் வழியில் சுய சிந்தனை தன்னம்பிக்கை ஏற்படுத்த வகைகள் இளைய தலைமுறையினருக்கு கவிதைகள் மற்றும் கட்டுரைகள் உள்ளிட்ட15 நூல்களை எழுதி இருக்கிறார். தனது தமிழாசிரியர் பணி மூலம் இளம் படைப்பாளர்களையும் உருவாக்கியும், உலக திருக்குறள் பேரவை, திருவள்ளூர் மன்றம், சாளரம் இளம் படைப்பாளர் இயக்கம் போன்ற பல்வேறு தமிழ் அமைப்புகள் மூலமும்
உலக தமிழ்ச் சங்கத்தில் தமிழ் வளர்ச்சி துறைகளிலும் தமிழ் பணியாற்றி வருகிறார்.

இதுவரை மேடைப் பேச்சாளராகவும் கவிஞராக வும் எழுத்தாளராகவும் 2000க்கும் மேற்பட்ட மேடைகளில் கவியரங்கம் கருத்தரங்கம் பட்டிமன்றம் வழக்காடு மன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.