• Fri. Mar 24th, 2023

ஏழுமலையானை தரிசனம் செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு..!

Byவிஷா

Feb 23, 2023

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும் என்பதால், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நீண்டகால வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,
மார்ச் மாதம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் நீண்டகால நோய்களால் அவதியுறுபவர்கள் ஆகியோர் ஏழுமலையானை தரிசிக்க தேவையான டிக்கெட்டுகள் இன்று காலை 9:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
பக்தர்கள் தேவஸ்தான இணையதளம் tirupathibalaji.ap.gov.in மூலம் டிக்கெட்டுகளை இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *