நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்றது .
இயேசுவின் சிலுவைபாடுகளை தியானிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் அனுசரிப்பார்கள். இந்த தவக்காலத்தில் நோன்பிருந்து, ஏழை– எளியவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட உதவிகளை செய்வார்கள். இந்த நாட்களில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பார்கள். தவக்காலம் சாம்பல் புதன் தினத்தில் இருந்து தொடங்கும்.
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதையொட்டி நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்றதுஇதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்