ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில். கார்த்திகை முன்னிட்டு புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் மகா அபிஷேகமும் புறப்பாடு மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
உலக புகழ் பெற்ற ராஜேந்திர சோழன் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பெரும்பாலான நாடுகளை வெற்றி கொண்டு அங்குள்ள சிறப்பு வாய்ந்த சிற்பங்களை கொண்டு வந்து ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகிலேயே பெரிய சிவலிங்கமான பிரகதீஸ்வரரை நிறுவி கங்கை நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்த, ஐநாவின் ஓர் அங்கமான யுனோஸ்காவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட கோவிலான கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு வெள்ளி தெய்வானை சமேத முருக பெருமானுக்கு 11 புனித பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து அலங்காரமும் நடைபெற்றது. இன்று மாலை முருகப்பெருமானுக்கு மகா அபிஷேகமும் சிறப்பு அபிஷேகமும் கோவிலுக்குள் பிரகார ஊர்வலமும். கோவிலின் முன் அமைக்கப்பட்டுள்ள சொக்கைப்பணையை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.