• Fri. Apr 19th, 2024

மேல அகத்தீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள விளந்தை கிராமத்தில் உள்ள அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மேல அகத்தீஸ்வரர் கோவிலில். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் நமச்சிவாயா அரோகரா கோஷமிட்டு மிட்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
ஜெயங்கொண்டம் அருகே சித்தர்களில் முதன்மையானவரான அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவபெருமானின் ஐந்து முகத்திற்கும் ஐந்து சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் அதில் ஒன்றான   ஆண்டிமடம்- விளந்தை கிராமத்தில் உள்ள  அறம்வளர்த்தநாயகி தர்மசம்வர்த்தினி உடனுறை மேல அகத்தீஸ்வரர் கோவிலில்.

கார்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு சொக்கப் பனை கொளுத்தும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல் இந்த ஆண்டு உற்சவரான  சந்திரசேகர்  உடனுறை சிவகாமி அம்பாள்  சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது.  தொடர்ந்து உற்சவர்கள் பிரகாரத்தை சுற்றி வளம்வந்து கோவிலின் ராஜகோபுரம் முன்பு  அமைத்திருந்த சுமார் 10 அடி  உயர பனை மட்டையால் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை ப தீபம் மேற்றி கொளுத்தினர்.  கூடியிருந்த ஆண்டிமடம், விளந்தை  உட்பட பத்திற்கு மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள்  ஓம் நமச்சிவாயா, அரோகரா கோஷமிட்டு வழிபட்டனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *