நடிகர் சோனு சூட் நடிகர் என்பதைத் தாண்டி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். மாணவர்களுக்கான கல்வி, விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் என பலருக்கு உதவியுள்ளார். இத்தகைய சூழலில் பொது வாழ்க்கையான அரசியல் என்ட்ரி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அவர்.
சுதந்திரமாக பணி செய்ய அனுமதிக்கும் எந்தவொரு தளத்திலும் பணியாற்ற நான் தயார். அது அரசியலாகவும் இருக்கலாம். அது இல்லாமல் கூட இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
மேலும் தனது சகோதரி மாளவிகா சூட், எந்த அரசியல் கட்சியில் சேர உள்ளார் என்பது இன்னும் உறுதியாகவில்லை எனவும், அதே நேரத்தில் “கட்சியை விட கொள்கை தான் முக்கியம். எனது சகோதரி மக்களுக்காகவும், சமூதயத்திற்காகவும் சேவை செய்திடதான் அரசியலுக்கு வருகிறார்” என தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அண்மையில் பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்திருந்தார் சோனு சூட்.