• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் முதல்வர் இன்று ஆய்வு

Byமதி

Nov 15, 2021

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை தொடர்ந்து பார்வையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்த்தார். இந்நிலையில் இன்று கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்புகளை மேற்பார்வையிடுகிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழை தொடர்கிறது. 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்டு முகாம்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் மாற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் இன்று மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்கிறார்.