• Fri. Apr 26th, 2024

முதல்வரை சந்தித்த ஒபிஎஸ் மகன் -அதிமுகவிலிருந்து நீ்க்கப்படுவாரா?

ByA.Tamilselvan

May 19, 2022

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி. நேற்று தமிழக முதல்வரை சந்தித்தார். இந்நிகழ்வு அதிமு.கவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,மேலும் ரவீந்திரநாத் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது.
கடந்த முறை நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஒருவரை தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் மண்ணை கவ்வினர். தேனி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மட்டும் வெற்றிபெற்றார். நாடாளுமன்றத்துக்கு முதன்முறையாக அவர் தேர்வானார்.
அதிமுக எம்பி யாகஇருந்தாலும் தலைமை முடிவுக்கு எதிராக மக்களவையில் செயல்படுவது வாடிக்கையாக மாறியது. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக எம்.பி என்று வலம் வந்தாலும், டெல்லியில் ஓ.பி.ரவீந்திரநாத் பா.ஜ.க எம்.பியாகவே வலம் வந்தார் என கூறும் அளவுக்கு நிலைமை உள்ளது.
இந்நிலையில் தான் மாநில வளர்ச்சி குழு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் எம்.பிக்கள் கலந்து கொண்டு கருத்துகளை முன் வைத்தனர். குறிப்பாக விசிக தலைவர் திருவமாவளவன், காங்கிரஸ் திருநாவுகரசர், ஓ.பி.ரவிந்திரநாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது, நீங்கள் அனைவருமே ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஆலோசனை சொல்வதற்காக வந்திருக்கிறீர்கள். இந்த ஆட்சி அமைந்தபோது நான் குறிப்பிட்டு ஒன்றை சொல்லி இருந்தேன். இது, என்னுடைய அரசு கிடையாது. நம்முடைய அரசு என சொன்னேன். நம்முடைய அரசு என்கிற பரந்த உள்ளத்தோடு, நீங்கள் எல்லாரும் இங்கே வந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நமது மாநிலத்துக்கு தேவையான நல்ல திட்டங்களை நிறைவேற்ற ஆலோசனைகளை சொல்லுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதையடுத்து பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் பகிரப்பட்டு கூட்டமும் முடிந்தது.
ஆனால், ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவிந்திரநாத் திடீரென முதல்வர் அலுவலகத்துக்கு சென்று விட்டார். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பல்வேறு வசதிகளை செய்து தர வேண்டும் என்றும், தேனி மக்களவை தொகுதிக்கு தேவையான கோரிக்கைகள் தொடர்பாகவும் மனு அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது பாரதியார் கவிதை புத்தகத்தை முதல்வருக்கு எம்.பி ரவீந்திரநாத் பரிசாக அளித்தார். இதன் தொடர்ச்சியாக ஓ.பி.எஸ் மகன் ஓ.பி.ரவிந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்று அதிமுத வட்டாராத்தில் பெரும்பரபரப்பை கிளப்பி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *