• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது- அண்ணாமலை விமர்சனம்

Byகாயத்ரி

May 19, 2022

தமிழக அமைச்சர்கள் 90 சதவீதம் பேருக்கு ஆங்கிலம் தெரியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். விமானம் கூட ஏற தெரியாத இவர்களால் டெல்லிக்கு சென்று தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா நிதி கூட பெற்று தர முடியாது என்றும் விமர்சித்துள்ளார். மேலும் திமுக அமைச்சர்கள் சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள் என்றும், கோடை காலத்தில் மழை வந்தாலும் அதற்கு காரணம் திராவிட மாடல்தான் என்று கூறுவார்கள் என அண்ணாமலை தெரிவித்திருந்தார் . இந்நிலையில் இதற்கு பதிலளித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழக அமைச்சர்களுக்கு தமிழ் படிக்க தெரிந்தாலே போதும். ஆங்கிலம் தெரிய வேண்டுமென்று அவசியமில்லை. துறையை சிறப்பாக உன்னிப்பாக அர்ப்பணிப்போடு திறம்பட செய்தாலே போதும் என்று தெரிவித்துள்ளார்.