



கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக பொள்ளாச்சி, உடுமலை, திருச்சி, மதுரை, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு பல்லடம் பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் நால்ரோடு உள்ளது.

ஆகையால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகள் உயிரிழக்கும் சம்பவம் அதிக அளவில் நடைப்பெற்று வருகின்றன. ஆகையால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் விபத்துகளை தடுக்கவும் நால்ரோடு பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டி நெடுஞ்சாலைத்துறையை வலியுறுத்தும் விதமாக ஒரு காலில் நின்று சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த சாலையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. காரணம்பேட்டை நால்ரோட்டை கடக்கும் போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டு உயிர் இழப்புகள் அதிக ஏற்படுகின்றன. எனவே விபத்தை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை துறை இந்தப்பகுதியில் ஒரு வட்ட வடிவிலான ரவுண்டான அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

