• Fri. Apr 18th, 2025

திமுகவை அகற்ற வேண்டும்., ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி..,

ByS.Navinsanjai

Apr 13, 2025

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் இச்சிப்பட்டி , கோடாங்கி பாளையம், செம்மி பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு நீலகிரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூனன் மற்றும் அதிமுக கால்நடைத்துறை முன்னாள் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பல்லடம் வடக்கு ஒன்றிய செயளாலரும் முன்னால் பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான கரைப்புதூர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில் சில மாதங்களுக்கு முன்பு பேசும் போது கூட சட்ட தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி அறிவித்தார். தற்போது திடிரென கூட்டணி வைத்த நிர்பந்தம் ஏன் என கேட்டதற்கு திடீர் கூட்டணி கிடையாது. ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்துள்ளோம். தற்போது நடக்கும் அரசை அகற்ற வேண்டும் என ஒரே கருத்தோடு இணைத்துள்ளோம். ஏற்கனவே எடப்பாடியார் தமிழகத்தில் மெகா கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வருவோம் என கூடி வந்தால் அதனுடைய தொடக்கம் தான் தற்போதைய பாஜக கூட்டணி எனவும் இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்கு வருவார்கள் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமையும் என தெரிவித்தார்.

பாஜகவுடன் ஓபிஎஸ் மற்றும் தினகரன் ஏற்கனவே கூட்டணியில் இருந்து வரும் நிலையில் நீங்கள் அவர்களுடன் சேர்ந்து தேர்தலில் பணியாற்றுவீர்களா என செய்தியாளர் கேள்விக்கு எங்களைப் பொறுத்தவரைக்கும் திமுகவை தோற்கடிக்க வேண்டும் அதற்கு எடப்பாடியார் பல வியூகங்களை வைத்துள்ளார். இன்னும் தேர்தலுக்கு 10 மாதம் உள்ளது அதற்குள் திமுகவை எதிர்க்க அண்ணாதிமுக அனைவரையும் ஒன்றினைத்து செயல்படுத்துவார்கள்.

மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி வரவேண்டும் ஏனென்றால் அம்மா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திமுக நிறுத்தி வைத்துள்ளது மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சிக்கு வந்து அனைத்து திட்டங்களையும் கொண்டு வர வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர் என தெரிவித்தார். இதனை அடுத்து நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தவெக கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வீர்களா? என செய்தியாளர் கேள்விக்கு திமுகவை அகற்ற வேண்டும் எனவும் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் எனவும் யார் வந்தாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் என தெரிவித்தார்.