



பல்லடம் அருகே அதிகாலையில் நடந்த கோர விபத்து-பட்டுக்கோட்டையில் இருந்து கோவை நோக்கி சென்ற ஆம்புலன்ஸ் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

பட்டுக்கோட்டையை சேர்ந்த முருகன் என்பவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றபோது சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் ஆம்புலன்சில் பயணித்த முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

உடன் சென்ற அவரது குடும்பத்தார் கல்யாணி, கவிதா மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கவியரசன் மற்றும் விஜய் ஆகிய நான்கு பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

