

உங்கள் மொபைல்போனுகளுக்கு வரும் எஸ்எம்எஸ்கள் குறித்து கவனமாக இருக்குமாறு எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. எது வங்கியில் இருந்து வரும் அதிகாரப்பூர்வமாக வரும் மெசேஜ்கள் மற்றும் தவறான நம்பரில் இருந்து வரும் தகவல் என்ற வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள் என்று எஸ்பிஐ விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.இப்படி தவறான நம்பரில் இருந்து வரும் மெசேஜ்களுக்கு ரிப்ளை செய்தால் உங்களது பணமும், தகவலும் பறிபோகும் வாய்ப்பு இருப்பதாகவும் வங்கி எச்சரித்துள்ளது.
