• Thu. Mar 30th, 2023

Double ஆக்சனில் நடிக்க தயாராகும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்தியேன் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகியிருக்கும் டாக்டர். இந்த படத்தை திரையரங்கில் வெளியிட முயற்சிகள் நடந்து வருகிறது. சிவா நடிக்கும் மற்றொரு திரைப்படமான அயலானும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் டான் என்ற ரொமான்டிக் காமெடி படத்திலும் நடித்து வருகிறார்.

இதற்கு அடுத்து அவர் நடிக்கும் படத்துக்கு சிங்கப்பாதை என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அப்பா, மகன் என இருவேடங்களில் அவர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அட்லியின் உதவி இயக்குனர் அசோக் படத்தை இயக்குகிறார்.கேஜேஆர் ஸ்டுடியோஸ் படத்தை தயாரிக்க, டி.இமான் படத்துக்கு இசையமைக்கிறார்.

படத்தை பற்றிய மற்ற விவரகள் விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *