பழனி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டி அப்பழுக்கற்றவர். சலிக்காமல் மக்கள் பணியாற்றக் கூடியவர் அவருக்கு வாக்களிக்க வேண்டுமென அமைச்சர் சக்கரபாணி பிரச்சாரம் செய்தார்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சிபிஐ(எம்) வேட்பாளர் பாண்டியை ஆதரித்து, உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பழனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக அமைச்சர் வாக்கு சேகரித்து வந்தபோது,பழனி நகரின் 7-வது வார்டில் அமைச்சர் நுழைந்தபோது, திமுக கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் நூதன வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 100 கிலோ பூக்களை ஜேசிபி இயந்திரம் மூலம் தொண்டர்கள் தூவ, பூ மழையில் நனைந்தபடி அமைச்சர் வாக்கு சேகரித்தார்.இந்நிகழ்வில் தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் . நகர்மன்ற தலைவர். மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அமைச்சரின் இந்த அதிரடி பிரச்சாரமும், தொண்டர்களின் பிரம்மாண்ட வரவேற்பும் பழனி தொகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மார்க்சிஸ்ட் வேட்பாளர் பாண்டியை ஆதரித்து அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: மார்க்சிஸ்ட் வேட்பாளர் பாண்டி அப்பழகற்றவர். பொது வாழ்க்கையில் தூய்மையான கரத்துக்கு சொந்தக்காரர். எந்த பணி கொடுத்தாலும் நேர்மையாக செய்யக்கூடியவர். மக்கள் பணி செய்வதற்கு அவதாரம் எடுத்தவர். அவருக்கு வாய்ப்பளித்தால் திமுக கூட்டணிக்கு வாய்ப்பு அளித்ததாக அர்த்தம். மதவாத சக்திகள் நம்மை ஆளாமல் இருக்க இவருக்கு வாய்ப்பளியுங்கள்.
மக்கள் பிரச்சினைகளை கண்டு பாண்டி ஒதுங்குபவர் இல்லை. உடனடியாக தலையிட்டு அந்தப் பிரச்சினைகளை தீர்க்கக் கூடியவர். இவருக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் வாக்களித்து வெற்றி அடையச் செய்யுங்கள். இவ்வாறு அமைச்சர் பேசினார்.



