
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஒருவரையும் அவரது கணவரையும் மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநில சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான மெலிசா ஹார்ட்மன் (55) மற்றும் அவரது கணவர் மார்க் ஹார்ட்மன்(60) ஆகியோர் போலீஸ் உடையில் வந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதுபோல் மாநில செனட் சபை உறுப்பினரும் ஜனநாயகக் கட்சித் தலைவருமான ஜான் ஹாஃப்மன் வீட்டிலும் இந்தத் தாக்குதல் நடந்தது. துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஹாஃப்மன் தம்பதியினர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மினியபொலிஸுக்கு அருகிலுள்ள சாம்பிளின் மற்றும் அருகிலுள்ள புரூக்ளின் பார்க் ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை இந்த சம்பவங்கள் நடந்தன. அதிகாலை 2 மணியளவில் சாம்பிளினில் ஹார்ட்மன், ஹார்ட்மன் கதவைத் தட்டி வெளியே வரச் செய்து அந்த நபர் சுட்டுக் கொன்றார்.
இச்சம்பவம் குறித்து அறிந்ததும், அருகிலுள்ள ஹார்ட்மன் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர், கொலைகளை முடித்துவிட்டு வெளியே வந்து கொண்டிருந்த தாக்குதல் நடத்திய குற்றவாளியை நேரில் பார்த்தனர். காவல்துறையினரை நோக்கிச் சுட்ட பிறகு அங்கிருந்து தப்பிய அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தாக்குதல் நடத்தியவர் காவல்துறையினர் பயன்படுத்தும் வகையிலான வாகனத்தில் வந்திருந்தார். அந்த வாகனத்தில் இருந்து, தாக்குதலுக்கு இலக்கு வைத்துள்ள அரசியல் தலைவர்களின் நீண்ட பட்டியல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. “மினசோட்டாவில் நடந்தவை திட்டமிடப்பட்ட தாக்குதல்கள், இதை அனுமதிக்க முடியாது,” என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
