சிவகங்கை மாவட்டம் ஏரியூர் கிராமத்தில் விபத்தை தடுப்பதற்காக ஆங்காங்கே சாலைகளின் குறிக்கே போடப்பட்டுள்ளது. அளவிற்கு அதிகமான உயரத்தில் போடப்பட்டுள்ள வேகத்தடையால் இருசக்கர வாகன விபத்திற்குள்ளான CCTV காட்சிகள் தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்த பெண்ணும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த குழந்தையும் வேகத்தடையும் கடக்கும் போது தூக்கி வீசப்படும் பதறவைக்கும் காட்சிகள் தற்போது வைரலாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் வேகத்தடை குறித்து வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வண்ணம் அறிவிப்பு பலகை, ஒளிரும் வண்ண பெயிண்ட் பூசப்படாததே இப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதோ அந்த வீடியோ…