விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் கவுதம சிகாமணி. மருத்துவரான இவர், திமுக அமைச்சர் பொன்முடியின் மகன் ஆவார். 1992ம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வரும் சிகாமணி, 2005ம் ஆண்டு முதல் ஸ்டாலின் நற்பணி மன்றத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், திமுக சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியின் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில், நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கடந்த வாரம் இதே போல், உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவுதம சிகாமணியை காண முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.