பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் ராம்சரண் இணைந்துள்ள RC15 படம் தமிழ், தெலுங்கில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஜெயராம், அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் மற்றும் நவீன் சந்திரா உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத் தளங்களில் வைரலானது.

170 கோடியில் இப்படம் உருவாகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் தியேட்டர் உரிமை, தியேட்டர் வெளியீட்டுக்குப் பிறகான டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமை என மொத்தமாக ஜீ ஸ்டுடியோஸ் 350 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.