• Wed. Mar 22nd, 2023

என்கிட்ட இருந்து ஹீரோக்கள பிரிச்சிட்டாங்க! – வைகைப்புயல் வருத்தம்!

நீண்ட வருடங்களுக்கு பிறகு வடிவேலு, நாய் சேகர் ரிட்டன்ஸ் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கிறார். இந்த நிலையில் சில ஹீரோக்களை என்கிட்ட இருந்து பிரித்துவிட்டனர் என வடிவேலு கூறியுள்ளார்

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க காமெடி கதை களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்திலும் வடிவேலு காமெடியனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தன்னிடம் இருந்து சில ஹீரோக்களை சிலர் பிரித்து விட்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஒரு படத்தில் காமெடி வெற்றி பெற வேண்டுமென்றால் காமெடியனுக்கும் ஹீரோவுக்கும் டைமிங்கி கெமிஸ்ட்ரி மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆக வேண்டும் அந்த வகையில் வடிவேலுவுக்கும் தமிழ் ஹீரோக்களுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகும். ஆனால், அவ்வாறு பேசி நடிக்கும் பொழுது ஒரு சில ஹீரோக்கள் இடம் நீங்க ஒரு ஹீரோ சார் அவர் காமெடியன் உங்களை போய் வாடா போடான்னு திட்டுகிறார் எனக்கூறி என்னிடமிருந்து சில ஹீரோக்களை பிரித்து விட்டார்கள் என வடிவேலு பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *