அஜித் மற்றும் ரஜினிகாந்த் இடையே இருக்கும் ஒரு குணம் குறித்து, நயன்தாரா பேசிய த்ரோபேக் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!
நயன்தாரா நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து சந்திரமுகி, குசேலன், தர்பார், அண்ணாத்த படங்களிலும், நடிகர் அஜித்துடன் பில்லா, ஆரம்பம், ஏகன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்!
இந்நிலையில், விஸ்வாசம் படம் வெளியாகும் சமயத்தில் நடிகை நயன்தாரா அளித்த அந்த த்ரோபேக் பேட்டியில் அஜித் மற்றும் ரஜினி இருவரும் பெண்களை கண்டால் எழுந்து நின்று தான் பேசுவார்கள். பெண்கள் என்பதற்காக அலட்சியம் செய்ய மாட்டார்கள். அந்த அளவுக்கு பெண்களுக்கு இருவரும் மரியாதை கொடுப்பார்கள் என பேசியுள்ளார்.
இந்த த்ரோபேக் வீடியோ ஒரு சிறிய க்ளிப்பை போட்டு அஜித் மற்றும் ரஜினி மட்டுமே பொண்ணுங்களுக்கு மரியாதை கொடுப்பாங்கன்னு நயன்தாரா சொல்கிறார். விஜய்யை அவர் இதில், குறிப்பிடவில்லை என அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களுடன் சண்டை செய்து வருகின்றனர்.