தமிழ் திரையுலகில் பேட்ட திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின் தற்போது மாறன் திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது மாளவிகா மோகனன் சில தெலுங்கு படங்களிலும் வருகிறார்.
அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வரும் மாளவிகா கூறுகையில், “எனக்கு கவர்ச்சியாக தோன்றுவதற்கும், நடிப்பதற்கும் மிகவும் பிடிக்கும்…என்னை பொறுத்தவரையில், அதுதான் அழகாக தோன்ற செய்கிறது…சில நேரங்களில் நான் கேரளா புடவையில் அழகாக இருப்பேன் என எனக்கு தோணும்..சில நேரம் மார்டன் உடையில் அழகாக இருப்பதாக தோன்றும்…அந்தந்த நேரத்தை பொறுத்து மனநிலை மாறும்” என கூறியுள்ளார்.