சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வீட் டில் ஞாயிறன்று அம லாக்கத்துறை யினர் சோதனை நடத்தினர். பின்னர் அவரையும் கைது செய்தனர். 1,034 கோடி ரூபாய் நிலமோசடி தொடர்பான வழக்கில் சிவசேனா மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரு மான சஞ்சய் ராவத் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஜூலை 20-ஆம் தேதி ஆஜராகும்படி சஞ்சய் ராவத் திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப் பியது. ஆனால், சஞ்சய் ராவத் ஆஜராக வில்லை. தொடர்ந்து 27-ஆம் தேதி ஆஜராகும் பம்படி அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி யது. ஆனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் அடுத்த மாதம் 7-ஆம் தேதிக்கு பின் ஆஜராவதாக சஞ்சய் ராவத் அமலாக்கத் துறையிடம் தெரிவித்தார். இந்நிலையில், மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி னர். பின்பு அவரை கைது செய்தனர்.