• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கிக் பாக்ஸிங் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தேர்வு!

வரும் மார்ச் மாதம் 26ம் தேதி இமாசலப் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் கிக் பாக்ஸிங் நேஷனல் சாம்பியன்ஷிப் தமிழ்நாட்டு வீரர்களுக்கான தேர்வு 6.3.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் நடைபெற்றது.

மாநில அளவிலான கிக் பாக்ஸிங் சம்பியன்ஷிப் போட்டி சென்னை மதுரவாயல் அடுத்த இந்தியாவின் மிகப்பெரிய தற்காப்பு கலை மையமான எவர் லாஸ்ட் பிரேவ் சர்வதேச ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது இந்த போட்டியில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு, சேலம், திருவண்ணாமலை, திருவள்ளுர் ஆகிய தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள் அனைவரும் தேசிய அளவிலான கிக்பாக்ஸிங் போட்டியில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ளனர். இந்த போட்டியை கிக் பாக்ஸிங் சங்கத்தின் தமிழ்நாட்டின் தலைவரும் மேலும் புருஸ்லீயின் 1நொடியின் அதிவேக குத்துகளை முறியடித்து புதிய உலக சாதனை படைத்தவரும் வேல்ட் சாம்பியன் கிக் பாக்ஸரும் தொழில்துறை குத்துச்சண்டை வீரருமான பாலீசதிஷ்வர் முன்னின்று நடத்தினார். மேலும் இந்த போட்டிக்கு இந்தியாவின் முதல் யு.எப்.சி வீரர் பரத் கந்தாரே முன்னிலை வகித்தார்.