தேனி அருகே நடந்த மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் இந்தியா சிமென்ட்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது.
தேனி கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநில அளவிலான மேனகா மில்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் தேனி அருகே தப்பு கொண்டு கிராமத்திலுள்ள டி.என்.சி.ஏ., அகாடமி மைதானத்தில் நடந்தது.
கடந்த 26ம் தேதி, துவங்கிய இப்போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. இதில் நேற்று முன் தினம் மார்ச் 4ம் தேதி நடந்த பைனலில் சென்னையின் டேக் சொல்யூஷன்ஸ் – இந்தியா சிமென்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டேக் சொலுயுஷன்ஸ் அணிக்கு ஆதீஷ் (54) ராஜ்குமார் (32) கைகொடுக்க 29.2 ஓவரில் 173 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ஆல்-அவுட் ஆனது.
இந்தியா சிமென்ட்ஸ் சார்பில் குர்ஜப் நீத் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சிமென்ட்ஸ் அணிக்கு விஷால் வைத்தியா(47), நிதிஷ் ராஜகோபால் (34), அபிஷேக் தன்வர் (31 நாட் அவுட்) கைகொடுக்க 29.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆட்டநாயகன் விருதை அபிஷேக் தன் வர் வென்றார். இந்தியா சிமென்ட்ஸ் அணிக்கு கோப்பையுடன் ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட்டது
சிறந்த பேட்டராக (பேட்ஸ் மேன்) சதுர்வேத் (டேக் சொலுயுஷன்ஸ்), சிறந்தவராக பவுலராக அபிநவ் ( இந்தியா சிமென்ட்ஸ் ), சிறந்த ஆல்- ரவுண்டராக விவேக் ராஜ் ( டேக் சொலுயுஷன்ஸ்) ஆகியோர் தேர்வாகினர். தேனி மாவட்ட கிரிக்கெட் சங்க பொறுப்பாளர்கள் மகேஷ் ராஜா, ராம்பிரசாத் ஆகியோர் மேற்பார்வையில் அனைத்து போட்டிகளும் நடந்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து இந்தியன் கிரிக்கெட்டர் நடராஜன் பரிசு கோப்பை வழங்கி பாராட்டினார்.