• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கோவை, திருப்பூர் பேரின்ப பெருவிழா..,

BySeenu

Apr 27, 2026

இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பாக கோவை,திருப்பூர் பேரின்ப பெருவிழா 2026 எனும் நிகழ்ச்சி கோவை திருப்பூர் இடையே உள்ள காரணம்பேட்டை பகுதியில் வரும் ஏப்ரல் 29 ந்தேதி துவங்கி மே 03 ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது..

இதில் கோவை பேரின்பப் பெருவிழா நிகழ்ச்சியின் தலைவர் ஜவஹர் சாமுவேல் செய்தியாளர்களிடம் பேசினார்.

கோவை மற்றும் திருப்பூர் இடையே உள்ள காரணம்பேட்டை தேவமகிமையின் தோட்டம் மைதானத்தில் உலக அமைதி வேண்டியும்,அனைவரின் துன்பங்கள் விலகும் வகையில், கிறிஸ்தவ விழாவாக நடைபெறுவதாக தெரிவித்தார்.

இதில் அனைத்து கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பனரும் வேறுபாடின்றி கலந்து கொள்வதாக கூறிய அவர்,சுமார் இருபதாயிரம் பேர் வரை இதில் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார்..

பேரின்பப் பெருவிழா என இயேசுவை போற்றும் ஒரு கிறிஸ்தவ விழாவாக நடைபெற உள்ள இதில் பலவிதமான ஆராதனைகள், பாடல்கள், மற்றும் பிரசங்கங்கள் இடம்பெறும் என அவர் கூறினார்..

மேலும் நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு தேவையான வாகன வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், குறிப்பாக கோவை நகர் பகுதிகள்,மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம்,உடுமலை போன்ற சுற்று வட்டார பகுதகளில் இருந்து நிகழ்ச்சியில் அனைவரும் வந்து கலந்து கொள்ளும் விதமாக பேரின்ப பெருவிழா வாகனங்கள் இலவசமாக இயக்கபடுவதாக அவர் தெரிவித்தார்..

மேலும் பார்க்கிங் வசதி,அமர்வதற்கான இருக்கைகள்,மூன்று வேளை உணவு,மருத்துவ வசதி,என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்..

இந்த சந்திப்பின் போது,டேனியல் ஜவஹர் சாமுவேல் மற்றும் பிஷப் பெக்சல் ஜேக்கப் ஆகியோர் உடனிருந்தனர்..