மதுரை சமயநல்லூரில் சரித்திர பதிவேடு குற்றவாளி சூர்யா மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமயநல்லூர் காவல் நிலையத்திற்கு வந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தேவநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.
மதுரை மாவட்டம் சமயநல்லூரில் நேற்று இரவு 11.30 மணி அளவில் சரித்திர பதிவேடு குற்றவாளி சூர்யா என்பவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீது ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட அடிதடி கொலை வழக்குகள் உள்ள நிலையில் காவல்துறையினரின் தொடர் கண்காணிப்பில் இவர் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இவரை மர்ம நபர்கள் கொலை செய்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் மதுரை சமயநல்லூர் காவல் நிலையத்திற்கு வருகை தந்த மாவட்ட எஸ்பி தேவநாதன் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது..,
சரித்திர பதிவேடு குற்றவாளி சூர்யா என்பவர் நேற்று இரவு 11:30 மணியளவில் கொலை செய்யப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்த நிலையில், அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து முதல் கட்ட விசாரணையில் சூர்யா தனது நண்பர்கள் உடன் நேற்று மாலை சமயநல்லூர் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தபோது, ஏற்பட்ட தகராறில் கம்பு கட்டைகளை கொண்டு அவரது நண்பர்களால் சூர்யா தாக்கப்பட்டு இறந்திருக்கலாம் என தெரிய வருகிறது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்டுள்ள சூர்யா மீது ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இவர் தொடர் காவல் துறையின் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவல் உட்படுத்த சென்ற நிலையில், நீதிமன்றம் அவரை பிணையில் விட்டது. இதன் பிறகு இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.
கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கொலைக்கு முன்விரோதம் காரணம் இல்லை என தெரிய வருகிறது. கொலை செய்யப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள்.
பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு மது, கஞ்சா போன்ற பொருட்களை காரணமாக பொதுமக்கள் கூறப்படுவதாக, கேள்விக்கு விரைவில் மது கஞ்சா போன்ற போதை பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்டு குற்றங்கள் குறைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் இவ்வாறு கூறினார்.