கோவிலாங்குளம் கண்மாய் நீர்ப்பிடிப்புப் பகுதியில் சோலார் நிறுவனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நவம்பர் 5-ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு அறிவித்துள்ளது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் நீர்நிலைகளையும் பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ் விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கோவிலாங்குளம் கண்மாயின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் தனியார் சோலார் நிறுவனம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் நவம்பர் 5-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் எனத் தமிழ் விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கோவிலாங்குளம் கண்மாயின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் தனியார் சோலார் நிறுவனம் அமைப்பதற்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் ரகசியமாக அரசாணை வழங்கியுள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக விளங்கும் கண்மாய் நீர்ப்பிடிப்புப் பகுதியில் தனியார் நிறுவனம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதே போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நீர்நிலைகளையும் விவசாய நிலங்களையும் பாதுகாப்பது அரசின் அடிப்படைக் கடமை என்றும், விவசாயிகளின் நலனைப் பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் என்றும் விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து, நவம்பர் 5-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் நோக்கி விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் கூட்டமைப்பு விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், விவசாயச் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இந்தப் போராட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டு ஆதரவு அளிக்க வேண்டும் எனத் தமிழ் விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

கோவிலாங்குளம் கண்மாய் விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் அரசாணை ரத்து செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் விவசாயிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.