• Thu. Mar 28th, 2024

மதுரையில் இன்று பள்ளி திறப்பு – மாணவிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ரோஜாப்பூ வழங்கி வரவேற்பு…

Byகுமார்

Nov 1, 2021

தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பின் பின்னர் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள 2169 பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 3 லட்சத்து 46 ஆயிரத்து 579 மாணவ மாணவியர் பயில்கின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பின் பள்ளிகளுக்கு வருகை தந்த மாணவிகளுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ரோஜா பூ மற்றும் இனிப்புகளை வழங்கியும் வாழ்த்து தெரிவித்து வரவேற்றார்.

இன்று முதல் முதல் 15 நாட்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகள் நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கதை, பாடல், விளையாட்டு, ஓவியம், அனுபவ பகிர்வு, கலந்துரையாடல் போன்ற நிகழ்வுகளை நடத்த தொடங்கினர்.

கொரோனோ பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தபடுவதற்காக ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கின. மாணவியர்களை தங்களது பெற்றோர்கள் பாதுகாப்புடன் அழைத்துவந்து பள்ளிகளுக்குள் அனுப்பிவைத்தனர்.

வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக மன அமைதிக்கான பொது வழிபாடு நடத்தப்பட்டு பின்னர் கொரோனா பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் தமிழ் தாய் வாழ்த்து, தேசியகொடி ஏற்றி கொடி பாடல் பாடிய பின்னர் மாணவிகள் வகுப்புக்களுக்கு சென்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு வகுப்புகளுக்கு. வருவது மகிழ்ச்சியாக இருப்பதாக மாணவிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *