

586 நாட்களுக்குப் பிறகு 1 முதல் 8 வகுப்புக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. அழகாபுரம் பெரிய புதூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் மாணவ மாணவிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதன் அடிப்படையில் சேலம் பெரிய புதூர் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்1 முதல் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று துவக்கப்பட்டது.
இன்று காலை 8:30 மணி பள்ளிக்கு வர தொடங்கிய மாணவ மாணவிகளுக்கு சேலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் ஆசிரியர்கள் மலர் கொத்து கொடுத்து, இனிப்புகள் வழங்கி கௌரவித்தனர்.
காலை முதலே மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் வந்த மாணவ மாணவிகளுக்கு இந்த வரவேற்பு பெறும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் இன்முகத்தோடு வரவேற்று அவர்களை சமூக இடைவெளியோடு அமர வைத்தனர்.
மேலும் கொரானா வழிகாட்டு நெறிமுறைகளையும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளியில் திறக்கப்பட்டுள்ளது மாணவ மாணவிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
