

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 66 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நாகர்கோவிலில் உள்ள மார்ஷல் நேசமணியின் திருவுருவ சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் , விஜய் வசந்த் எம்.பி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை. இத்தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை.
கன்னியாகுமரி மாவட்டம் பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தனமான கேரளாவின் கட்டுபாட்டில் இருந்தது. 1945க்கு பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இனைப்பதற்காண போராட்டம் தொடங்கியது. இதில் மார்ஷல் நேசமணி தலைமை தாங்கிய பின்னர் போராட்டங்கள் அதிகரித்தது. இதில் கேரளா போலீசார் 1954ல் புதுக்கடை, உள்ளிட்ட பகுதிகளில் நடத்தபட்ட துப்பாக்கி சூட்டில் 11 பேர்கள் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து போராட்டங்கள் தீவீரமடைந்ததை தொடர்ந்து, 1956 நவம்பர் 1ஆம் தேதி குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்தது.
இணைந்த நாளை ஆண்டு தோறும் மொழி போராட்ட தியாகிகளும் பல்வேறு அமைப்புகளும், பல்வேறு கட்சிகளும் கொண்டாடி வருகின்றனர். மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்கள் காலத்தில் தான் இந்த தினத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து இந்த தியாக நாளுக்கு பெருமை சேர்த்தார்கள். அதுமட்டுமின்றி நாகர்கோவிலில் மார்ஷல் நேசமனிக்கு மணி மண்டபம் கட்டி கொடுத்து மேலும் பெருமை சேர்த்தார்கள்.
அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 66 ஆவது ஆண்டு தினத்தை தமிழக அரசு சார்பில் நாகர்கோவிலில் உள்ள மார்ஷல் நேசமணியின் திருவுருவ சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த், விஜய் வசந்த் எம்பி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
