ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கடனை குறைத்து வித்தியாசமான பட்ஜெட்டை அமல்படுத்துவதாக சொல்லிவிட்டு, இப்படியொரு வெற்று பட்ஜெட்டை தாக்கல் செய்வது மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்!
மதுரை விமான நிலையம் வந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுங்கயில், ‘தமிழக பட்ஜெட்டை பொறுத்தவரை வார்த்தை ஜாலத்தால் எழுதப்பட்ட பகல் கனவு தமிழக பட்ஜெட் தாக்கல்., தமிழக அரசின் கடன் தொகை 6 லட்சம் கோடியை தாண்டி செல்கிறது. உள்நாட்டு உற்பத்தி அளவீடு 26% கடன் என்ற அளவில் தமிழகத்தில் தற்போது உள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழகம் மட்டும் தான் கடந்த ஆண்டு அதிக கடன் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் கடன் சுமையில் 7000 கோடி வருவாய் ஈட்டி கடனை குறைத்ததாக கூறிவருகின்றனர். தற்போது அறிவித்துள்ள பட்ஜெட்டில் எந்த ஒரு பயனும் இல்லை! இப்படியே இருந்தால் இனி வரும் வருடங்களில் அரசு 80,000 கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும். தமிழக மக்களை கடுமையான கடன் சுமையில் தமிழக திமுக அரசு உண்டாக்குகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கடனை குறைத்து வித்தியாசமான பட்ஜெட்டை அமல்படுத்துவதாக சொல்லிவிட்டு இப்படியொரு வெற்று பட்ஜெட்டை தாக்கல் செய்வது மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது.?
தேர்தல் அறிக்கையில் மகளிர்க்கு 1000 ரூபாய் கொடுப்போம்., கேஸ் விலையை குறைப்போம் என்று கூறிய திமுக அரசு, தற்போது ஏற்கனவே இருந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு
தற்போது அரசு பள்ளி மாணவிகளுக்கு 1000ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.,ஆனால் அதில் எந்த தவறு கிடையாது ஏற்கனவே குடும்பத் தலைவிக்கு அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாயை கூட கொடுக்க முடியவில்லை.
இதில் 36 மாதங்களுக்கு தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் 5 லட்சம் மாணவிகளுக்கு 1000ரூபாய் கொடுக்க முடியுமா.? தாலிக்கு தங்கத்தை நிறுத்திவிட்டு வேறு திட்டத்திற்கு நிதியை மாற்றி கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். இவர்கள் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது இரண்டு திட்டத்தையும் குழப்புகிறார்கள். தெளிவில்லாத புரிதல் இல்லாத தொலைநோக்கு பார்வை இல்லாத பட்ஜெட் ஆகத்தான் பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு தமிழக அரசுக்கு நிலுவைத்தொகையை முழுமையாக கொடுத்ததால் வருவாய் வந்துள்ளதாக தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக உண்மையை கூறியுள்ளது., மத்திய அரசைப் பொருத்தவரை எந்த ஒரு மாநிலத்திற்கும் மற்றும் யாருக்குமே நிலுவைத்தொகையை நிறுத்தவும்., பாரபட்சமும் காட்ட மாட்டார்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீது பழிபோடும் நிலையில் தமிழக பட்ஜெட்டில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.
மத்திய அரசின் நிறைய திட்டத்திற்கு தமிழக அரசு புதிய பெயர் சூட்டி திட்டங்களை அறிவித்து வருகின்றனர். எத்தனை புதிய பெயர் சூட்டினாலும் அந்தத் திட்டம் தமிழக மக்கள் பயன் பெற வேண்டும் என்றார்., கடன்சுமையில் இருந்து தமிழகத்தை வெளியே கொண்டு வரவேண்டும் தமிழகத்தில் புதிதாக வருவாயை ஈட்ட வழி ஏற்படுத்த தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும் என்றார். தமிழக அரசின் இந்த பட்ஜெட் தாக்கல் என்பது பகல் கனவு காண்கின்ற பட்ஜெட் ஆகவே உள்ளது. தமிழக மக்களுக்கு சம்மந்தமில்லாத பொய்யை சொல்லி தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் பட்ஜெட் நிதியமைச்சர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்’ என்றார்.
பிஜிஆர் எனர்ஜிக்கு முதலில் ரெய்டு விட வேண்டும் என்று கூறிய அவர் முதலில் பிஜிஆர் நிறுவன ஊழல் தொடர்பாக திங்கள் கிழமை ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க உள்ளோம் என்று கூறினார். தொடர்ந்து பல்வேறு புகார்களை கொடுக்க உள்ளதாகவும்., கண்ணாடி கூண்டுக்குள் உட்கார்ந்து கல் எறியக்கூடாது., தயவு செய்து ஊழல் செய்யும் உங்கள் அமைச்சர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து வித்தியாசமான அரசு என்பதை மக்களுக்கு நிரூபித்துக் காட்டுங்கள். உங்கள் அமைச்சர் மீது உங்கள் அரசு நடவடிக்கை எடுக்கும் என மக்களுக்கு நம்பிக்கை கொடுங்கள் என்றார்.
ப.சிதம்பரம் என்ன அர்த்தத்தில் சொன்னார் எனத்தெரியவில்லை., நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் துணை பிரதமர் ஆக ஏராளமானோர் கனவு காண்கின்றனர். தமிழக முதல்வரும், மம்தா, பினராயி உள்ளிட்ட ஏராளமானோர் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஆகலாம் என்று கனவு காண்கின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை பிரதமர் பதவிக்கு போட்டி போடும் கூட்டம் அதிகமாக உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 400 எம்பிக்களை வைத்து மீண்டும் இந்தியாவில் பாஜக ஆட்சியை பிடிப்போம்.
விருதுநகர் எம்பி மாணிக் தாகூர் நாடாளுமன்றக் கூட்டத்தில் பள்ளி மாணவர்களைப் போல் ஆசிரியரிடம் புகார் அளிப்பதை நிறுத்திவிட்டு தொகுதி மக்களுக்கு நல்லது செய்யட்டும்., சொந்த தொகுதி மக்களை விட்டுவிட்டு வேறு ஒரு மாநிலத்தில் சென்று அரசியல் செய்வதை முதலில் நிறுத்த வேண்டும் பிரதமருக்கு நிறைய வேலை உள்ளது., அவர் கூறியதை பார்த்தபோது எனக்கு சிரிப்பு வந்தது, என்றார்.

- ஈழ விடுதலை போராட்டத்தை விவரிக்கும் மேதகு – 2கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் […]
- விஜய்யுடன் மீண்டும் நாயகியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தம்?நடிகர் விஜய் இப்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.தெலுங்குதயாரிப்பாளர் தில்ராஜு […]
- ஒரு விளம்பர பதிவிற்கு 1 கோடி வாங்கும் பாலிவுட் நடிகை!!இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரம் பதிவு செய்வதற்கு பிரபல பாலிவுட் நடிகை அலியாபட் ஒரு கோடி ரூபாய் […]
- இந்தி திணிப்பிற்கு தான் எதிர்ப்பு, இந்தி படங்களுக்கு அல்ல.. உதயநிதி பளிச்!!அமீர்கானின் “லால் சிங் சத்தா” படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்தி […]
- அனைத்துக்குடும்பங்களுக்கும்…. தமிழக அரசின் அதிரடி அறிவிப்புதமிழகத்தில் உள்ள அனைத்துக்குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை வழங்கபடும் என்று அமைச்சர் .மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அமைச்சர் […]
- தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் […]
- பிரம்ம முகூர்த்தம் பற்றிய பதிவுகள்…பிரம்ம முகூர்த்த ரகசியத்தைப் பற்றி அதிகாலையில் எழு, பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும் விஞ்ஞானமும் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 10: அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்தநன்னெடுங் கூந்தல் நரையொடு […]
- அதிமுக பொதுக்குழு வழக்கு – இன்று விசாரணை!!அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.அதிமுக. பொதுக்குழு […]
- பெண் குழந்தையை மேலோங்கி பார்த்த புத்தர்!!பெண் குழந்தைகளை பிரியமாய் நேசித்தவர் பகவான் புத்தர்.ஒருமுறை அவர் ஷ்ராவஸ்தியில் கோசல மன்னன் பசேந்தி புத்தரிடம் […]
- அழகு குறிப்புகள்முகப்பருக்கள் மறைய: முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெற, முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் […]
- அதிபர் புதினுக்கு அமெரிக்கா பார்க்கில் சிலை..அமெரிக்காவிலுள்ள நியூயார்க் சிட்டியின் சென்ட்ரல் பார்க்கில் (Central Park) இருக்கும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதியில் ரஷ்ய […]
- சமையல் குறிப்புகள்பச்சைப்பயறு கிரேவி:தேவையான பொருள்கள் –பச்சை பயறு – அரை கப், தக்காளி – 1, இஞ்சி […]
- காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை குவித்த இந்தியர்கள்காமன் வெல்த் போட்டியில் பதக்கங்களை இந்தியா குவித்து வருகிறது.பர்மிங்காமில் நடைபெற்றுவரும் காமன் வெல்த் போட்டியில் இந்தியா […]
- நினைவில் இருந்து விலகாத ஹிரோஷிமா, நாகாசாக்கி குண்டு வீச்சு நாள்…77 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை வீழ்த்த அந்நாட்டின் ஹிரோஷிமா, நாகாசாக்கி நகரங்களில் அணுக்குண்டு […]