• Fri. Apr 26th, 2024

திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி விழாவில் சண்முகர் மயில் மேல் அமர்ந்த காட்சி

Byதரணி

Oct 29, 2022

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி விழாவில் சண்முகர் மயில்மேல் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழா பிரசித்து பெற்றது. 25ஆம் தேதி முதல் துவங்கி வரும் 31ஆம் தேதி வரை ஏழு நாட்கள் கந்த சஷ்டி விழா நடைபெறும்.
சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் வள்ளி, தேவ சேன சமேத சண்முகருக்கு முருகனின் பிரதிநிதியாக நம்பி பட்டருக்கு காப்பு கட்டி பின்னர் பக்தர்களுக்கு கம்பத்தடி மண்டபத்தில் காப்புகட்டுதல் நிகழ்சி நடைபெறும்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். தொடர்ந்து விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினர், முன்னதாக, சுப்ரமணிய சுவாமி மற்றும் வள்ளி, தெய்வானைக்கு 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.விழாவை முன்னிட்டு தினமும் காலை மாலை இருவேளையும் சண்முகார்ச்சனை நடைபெறும். விழாவை முன்னிட்டு, சண்முகர் தினமும் வெள்ளை, பச்சை சிவப்பு உள்ளிட்ட பல்வேறுஅலங்காரங்களில் அருள் பாலிப்பார்.
அதேபோல அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றத்தில் தெய்வயானை சண்முகர் பெருமான் வருடத்தில் ஒருமுறைதான் மயில் மேல் உட்கார்ந்த அலங்காரத்தில் எழுந்தருளிய அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சண்முகரின் அருள் பெற்று சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *