• Wed. Feb 12th, 2025

ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை எஸ்.பி ஆய்வு

ByKalamegam Viswanathan

Dec 28, 2024

உலக புகழ் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட எஸ்.பி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உலகப்புகழ் பெற்ற பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகிற 15-ஆம் தேதி மற்றும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது டி.எஸ்.பி ஆனந்தகுமார், அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் போலீசார் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், பார்வையாளர் அமரும் கேலரி அமைப்பது, காளைகள் நிறுத்தப்படும் இடம், காளைகள் வந்து சேரும் இடம், வாடிவாசல், உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முன்னதாக பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.