• Mon. Jan 20th, 2025

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

ByP.Thangapandi

Dec 28, 2024

உசிலம்பட்டியில் மறைந்த தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேமுதிக நிர்வாகிகள் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர்.

இதில் பொதுக்குழு உறுப்பினர் எம் .எஸ். மாணிக்கம் , ஒன்றிய பொருளாளர் வில்லாளி செல்வம், நக்கலப்பட்டி முன்னாள் கவுன்சிலர் வாசக ராஜா, தொட்டப்ப நாயக்கனூர் கிளைச் செயலாளர் போத்தி ராஜா, செட்டியபட்டி கிளைச் செயலாளர் முருகன்,நகர இளைஞரணி தங்கப்பாண்டி, நகர அவைத் தலைவர் வேல்முருகன், பூச்சி பட்டி ராஜு ,நகர விவசாய அணி ராமர், வில்லாணி கிளைச் செயலாளர் ராஜபாண்டி, தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று செல்லம்பட்டி ஒன்றியம், சேடபட்டி ஒன்றியம், ஏழுமலை பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் அந்தந்த கிளை பகுதிகளில் தேமுதிக நிர்வாகிகள் நினைவு அஞ்சலி செலுத்தினர்.