தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பாக “விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி” முன்னாள் தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும், அரசியல் பிரமுகரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம். ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் அவருக்கு பிடித்த கடலை மிட்டாய், பிஸ்கட் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. உடன் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, மீசை அழகப்பன், நாகமலை புதுக்கோட்டை முருகன், எழுத்தாளர் விவேக் ராஜ், அறிமுக நடிகர் வைத்தியலிங்கம், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, நடிகை புனிதா, சமூக சேவகி தேவி பிரியா, சுல்தான் அம்மாள், சைக்காலஜிஸ்ட் ஆதிலட்சுமி, திவ்ய லட்சுமி, லட்சுமிகா ஸ்ரீ, ரசிகா ஸ்ரீ, குழந்தை நட்சத்திரம் லியானா ஆகியோர் கலந்து கொண்டனர். ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், தலைவர் மீனா, பிரியா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் அவரவர் வீட்டில் அஞ்சலி செலுத்தினார்கள். ஏழை எளியவர்களுக்கு காலை உணவு இட்லி, வடை 50 பேருக்கு வழங்கப்பட்டது.
